கடல்
A poem by Subramania Bharati

4. கடல்
1.
கடலே காற்றைப் பரப்புகின்றது.
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கி
யிருக்கும் கடல்-நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக்
கவிழ்ந்து திசைவெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
பராசக்தியின் ஆணை.
அவள் நமது தலைமீது கடல் கவிழ்ந்துவிடாதபடி
ஆதரிக்கிறாள்.
அவள் திருநாமம் வாழ்க.
கடல் பெரிய ஏரி, விசாலமான குளம், பெருங் கிணறு,
